பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு
ஆகஸ்ட் 28ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 785 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி34 புள்ளிகள் உயர்ந்து 25ஆயிரத்து52புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. LTIMindtree, Wipro, Divis Labs, IndusInd Bank, Bharti Airtel,உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை ஏற்றத்துடன் லாபம் கண்டன. Maruti Suzuki, Nestle India, Asian Paints, Adani Enterprises, Britannia Industries..உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. தகவல் தொழில்நுட்பம், மருந்துத்துறை, மற்றும் சுகாதாரத்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. டெலிகாம் துறை பங்குகள் அரை விழுக்காடு உயர்ந்தன. ஊடகத்துறை பங்குகள் 1.4%சரிவை கண்டன. FMCG, பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 0.4%வரை சரிவை கண்டன. ஆகஸ்ட் 28ஆம் தேதி புதன் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 715 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 720 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையில் மாற்றமின்றி, 93 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 93 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.