ஹியூண்டாயைத் தொடர்ந்து எல்ஜியும் களமிறக்கம்..
பிரபல கொரிய நிறுவனமான ஹியூண்டாய், தனது இந்திய வணிகத்தை மேம்படுத்த ஆரம்ப பங்கு வெளியிட கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் பெற்றது. இந்த நிலையில் எல்ஜி நிறுவனமும் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவை முக்கிய சந்தைகளாக பார்க்கின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் 75 பில்லியன் டாலர் என்ற வருவாயை எட்ட எல்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பொதுத்தேர்தல் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஆண்டின் இரண்டாவது பாதியில் மட்டும் 68,000 கோடி ரூபாயை திரட்ட இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 35 நிறுவனங்கள் சுமார் 32,000கோடி ரூபாய் அளவுக்கு ஆரம்ப பங்குகளை வெளியிட்டு லாபம் பார்த்துள்ளனர். மிகப்பெரிய கொரிய நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வளர்ச்சியை பெற பல சலுகைகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. இந்நிலையில் அதே பாணியாலான சலுகைகள் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொரிய நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைபடுத்தியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள்அளவுக்கு ஆரம்ப பங்கு வெளியிட ஹியூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹியூண்டாய் , எல்ஜி நிறுவனங்கள் இந்திய சந்தைகளில் களமிறங்கியுள்ளதால் இந்தியாவில் அவர்களின் மீது முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.