உயர்வுடன் முடிந்த சந்தைகள்
ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயர்ந்து 82ஆயிரத்து 134 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 25ஆயிரத்து152புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. Bajaj Finserv, Bajaj Finance, Tata Motors, Britannia Industries, BPCL,உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை ஏற்றத்துடன் லாபம் கண்டன. Grasim Industries, M&M, JSW Steel, Kotak Mahindra Bank,Dr Reddy’s Laboratories.உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் எப்எம்சிஜி நிறுவன பங்குகள் அரை முதல் ஒரு விழுக்காடு வரை உயர்ந்தன. கேபிடல் கூட்ஸ், மருந்துத்துறை, ஊடகம், உலோகம், ஆற்றல் துறை பங்குகள் 0.3 முதல் 0.7 விழுக்காடு வரை விலை சரிந்தன. Bajaj Finserv, Bharti Airtel, Sun Pharma, Whirlpool, HPCL, L&T Technology, Persistent Systems, Godrej Industries, Oil India, Voltas, Colgate Palmolive, Alkem Lab, Abbott India, Pokarna, Genesys International, Gokul Agro, Ram Ratna Wires, Gujarat State Petro, PNB Housing Finance, Concord Biotech, Godfrey Phillip, Genus Power உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 715 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 720 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலையில் மாற்றமின்றி, 93 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 93 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.