டாடா ஐபிஓ நிறுத்தி வைப்பா?
உப்பு முதல் உலோகங்கள் வரை அனைத்தையும் சாதுர்யமாக விற்கும் டாடா குழுமம் மேலும் ஒரு ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. பொழுதுபோக்குத்துறையிலும் உள்ள டாடா நிறுவனம், தனது கிளை நிறுவனமான டாடா பிளேவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. அண்மையில் சிங்கப்பூரைச் சேர்ந்த டெமாசெக் ஹோல்டிங் நிறுவனத்தில் சிறு முதலீட்டாளர்களின் பங்குகளை டாடா பிளே வாங்கியிருந்தது. இதனால் ஐபிஓ திட்டத்தை டாடா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. தற்காலிகமாக ஐபிஓ திட்டத்தை டாடா குழுமம் நிறுத்தி வைப்பதாகவும் ஆனால் வருங்காலங்களில் நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொழுதுபோக்குத்துறையில் மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மதிப்பை வைத்திருக்க டாடா பிளே விரும்பவதாக கூறப்படுகிறது. தற்போது வரை செட்டாப் பாக்ஸ் மற்றும் ஓடிடி தளங்களின் ஸ்ட்ரீமிங் சேவையை டாடா பிளே வழங்கி வருகிறது. டாடா பிளே நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டே தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த பணிகளை செய்து கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்தது. இந்தியாவின் முதல் நிறுவனமாக முக்கிய ஆவணங்களை பொதுவெளியில் விடாமல் ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய அப்போதே பணிகளை டாடா நிறுவனம் செய்தது.தற்போது மீண்டும் ஒரு முறை டாடா பிளேவின் ஐபிஓ பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.