மதாபி கோருவது என்ன?
இந்திய பங்குச்சந்தைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக உள்ளவர் மதாபி புரி புச். இவர் மீது அண்மையில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. இவருக்கும் அதானி நிறுவன பங்குகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டதே அந்த புகாராகும். நிறுவனங்கள் மீது புகார்கள் எழுவதை குறைக்கவேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று மதாபி அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டுக்கு ஆளான பிறகு முதல் முறையாக அவர் பொதுவெளியில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். உலகளாவிய நிதிநுட்ப திருவிழாவில் பங்கேற்ற அவர், நிதிநுட்ப நிறுவன வணிகங்களில் எளிதாக தொழில் செய்வது எப்படி என்பது குறித்து அவர் தனது சிறப்புரையை ஆற்றினார். கடந்த 2022-ஆம் ஆண்டு செபியின் தலைவராக மதாபி நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு செபியின் முழுநேர இயக்குநராக மதாபி நியமிக்கப்பட்டிருந்தார். ரியல் எஸ்டேட் துறை மற்றும் பியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்ஸ் துறைகளில் சில சீர்திருத்தங்களையும், சில வழிமுறைகளும் கொண்டுவரப்படும் என்றும் மதாபி கூறியிருந்தார். ஏனெனில் இந்த துறையில் அதிகளவில் பணம் புழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். gff நிகழ்ச்சியில் பங்கேற்றதும் பலரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த மதாபி, இந்த முறை ஒரு கேள்விகளை கூட எதிர்கொள்ளாமல் தனது உரையை முடித்ததும் நடையை கட்டினார்.