வாரனின் 94 ஆவது பிறந்தநாள்..
உலகின் மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவர் பிரபல தொழிலதிபர் வாரன் பஃப்பெட். இவர் தனது 94 ஆவது பிறந்தநாளை அண்மையில்(ஆகஸ்ட் 30 ஆம் தேதி) கொண்டாடினார். 1 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார்.முதலில் துணிக்கடையாக இருந்த நிறுவனம் பின்னர் காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்தது. கடந்த 1965ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை இந்த நிறுவனம் ஆண்டுதோறும் 19.8%வருமானத்தை திரும்பத் தருகிறது. இதுவரை 68 ஆண்டுகள் முதலீட்டாளராக வரலாறு கொண்டுள்ளார் வாரன் பஃப்பெட், அவர் தனது அனுபவத்தில் சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அதில் முதலாவதாக பணத்தை இழக்கக்கூடாது..இரண்டாவதாக முதல் விதியை மறக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். தெரிந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய அறிவுருத்தும் அவர், காம்பவுண்டிங்கை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 8 ஆவது அதிசயம் என குறிப்பிட்டுள்ளார். அதையேதான் வாரனும் கூறுகிறார். அடிக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டு உடனே வெளியே வரக்கூடாது என்று கூறும் அவர் நீண்டகால முதலீடு செய்ய வேண்டும் என்றார். நல்ல நிறுவனம், நல்ல நிர்வாகம், நல்ல விலை இவை மூன்றும் முக்கியம் என்று கூறும் வாரன், நீண்டகாலத்தில்தான் காம்பவுன்டிங் சிறப்பாக செயல்படும் என்றார். அதிக லாபத்தை தரும் வியாபாரம் நிச்சயம் போட்டியை சந்திக்கும் என்று கூறும் வாரன், பாதுகாப்பும் மிகமுக்கியம் என்று கூறுகிறார். சரியான நேரம் வரும் வரை காத்திருப்பதுதான் சரி என்று கூறியுள்ள அவர், சரியான வணிகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று 1998-ல் குறிப்பிட்டார். தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்ட வணிகத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றும் வாரன் குறிப்பிட்டார். பங்குகளை வியாபாரமாக பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட வாரன், வலுவான பிஸ்னஸை வாங்குவதும் அதில் நீண்டகாலம் ஒட்டிக்கொள்வதும் சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார். காம்பவுன்டிங் வேலை செய்ய விடுங்கள் என்றும் முக்கிய அறிவுரைகளாக வாரன் குறிப்பிட்டுள்ளார்.