2.75லட்சம் செல்போன் எண்கள் முடக்கம்..
பொதுமக்களுக்கு தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளை செய்து தொல்லை செய்த புகாரில் 2.75லட்சம் சிம்கார்டுகளை டிராய் அமைப்பு பிளாக் செய்துள்ளது. மேலும் பதிவு செய்யப்படாத டெலி மார்கெடிங் நிறுவனங்கள் மீதும் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கு தொல்லை தரும் செல்போன் எண்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியுள்ள டிராய், இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் 7.9லட்சம் பேர் தங்களுக்கு தேவையில்லாத செல்போன் அழைப்புகள் வருவதாக புகார் அளித்துள்ளனர். தேவையற்ற செல்போன் எண்களில் இருந்து அழைப்புகளை நிறுத்தி பொதும்களுக்கு நிம்மதி அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுத்தமான ஆக்கபூர்வமான டெலிகாம் சூழல் உருவாக்க வேண்டும் என்றும் நிறுவனங்களை டிராய் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை அளித்து வந்தால் அந்த எண்களை 2 ஆண்டுகள் வரை முடக்கி வைக்கப்போவதாகவும் டிராய் விளக்கம் கேட்டுள்ளது. டெலிகாம் சப்ஸ்கிரைபர்களில் ஒரு பிரிவினர் ஒரு நாளில் 50 முறை தொலைபேசி அழைப்பு செய்தாலோ, 50 எஸ்எம்எஸூக்கு மேலே ஒரு நாளைக்கு அனுப்பினாலோ அந்த எண்களை துண்டிக்கவும் டிராய் வகை செய்து வருகிறது.