முதலீடுகளை கொட்டிக்குவிக்கும் ஜாம்பவான்கள்.
இந்தியாவில் அதிவேக நகரமயமாதல், பொதுமக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் சமையல் துறை பழைய மாதிரி இல்லை. மக்கள் துரித உணவுகளுக்கு மாறி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமையல் மற்றும் உடனடியாக கிடைக்கும் பொருட்களான FMCG துறை மிகப்பெரிய எதிர்காலத்தை கொண்டுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், கவுதம் அதானியின் அதானி குழுமம் மற்றும் டாடா குழுமம் ஆகியவை FMCG துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகின்றன. 2028-ல் இந்தியா 3 ஆவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடும் என்று கூறும் அளவுக்கு அதிவேக வளர்ச்சியை பெற்று வருகிறது.
இதில் ரீட்டெயில் வணிகம் பெரிய லாபத்தை அள்ளித்தருகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் 3,900 கோடி ரூபாயும், அதானி குழுமம் பெரிய தொகையையும், டாடா குழுமம் 785 கோடி ரூபாய் அளவுக்கும் fmcg துறையில் முதலீடுகளை கொட்டி வைத்துள்ளனர். நெஸ்ட்லே, ஐடிசி, பிரிட்டானியா, கோத்ரேஜ் என பல நிறுவனங்கள் இந்த துறையில் போட்டியில் இருந்தாலும், முக்கியமான 3 நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் ஏழைகள் என்ற நிலையில் இருந்து நடுத்தர குடும்பம் என்ற அளவுக்கு மக்கள் தொகையில் பாதிபேர் வந்துவிடும் அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. பெரிய நிறுவனங்கள் நகரங்களை குறிவைக்கும் அதே நேரம் கிராமங்களையும் குறி வைக்கிறது. இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் சிறிய நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியை பெறும் என்று கூறப்படுகிறது. இந்த வேகமான வளர்ச்சியை சிறிய நிறுவனங்களிடம் தருவதற்கு அம்பானியும், அதானியும் டாடாவும் தயாராக இல்லை என்பதால் முதலீடுகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன