இந்தியப் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி..
செப்டம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 82ஆயிரத்து 201 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து 25ஆயிரத்து 145 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. அமெரிக்க பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வின் தரவுகளை எதிர்நோக்கி அமெரிக்க சந்தைகளில் சரிவு காணப்படும் நிலையில், இதே பாணியில் இந்திய சந்தைகளிலும் சரிவு காணப்பட்டன. ஊடக்துறை பங்குகள் 0.8 விழுக்காடும், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.66% உயர்வை கண்டன. நிஃப்டி உலோகம், பொதுத்துறை வங்கிப்பங்குகள் 0.3 விழுக்காடு ஏற்றம் கண்டன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1 விழுக்காடும், ஆட்டோ மற்றும் எண்ணெய் எரிவாயு துறை பங்குகள் 0.4% சரிவும் கண்டன. அமெரிக்க வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்பான தரவுகள் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதால் , வரும் திங்கட்கிழமைதான் உரிய சரிவா, ஏற்றமா என்பது தெரியவரும். செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வியாழக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 670 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை மாற்றமின்றி 90 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 90 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.