அமெரிக்க மந்தநிலைக்கு இதுதான் காரணம்..
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு பிரதானமான காரணமாக வேலைவாய்ப்பின்மைதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த மாதத்தில் மட்டும் 1.40லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. இது ஜூலை மாதத்தை விட சற்றே அதிகமாகும். எனினும், போதுமான அளவுக்கான வேலைவாய்ப்பாக இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். சிட்டி ரிசர்ச் என்ற அமைப்பின் தகவலின்படி, 1.18லட்சம் பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்திருந்தாலும், இது கடந்த 10 ஆண்டுகளில் 3 மாதங்களில் மிகவும் மோசமான வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று கூறப்படுகிறது. தனியார் வேலைவாய்ப்புகள் என்பது தொடர்ந்து குறைந்துகொண்டே செல்வதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ மொபைல் விற்பனை ஆகியவை மந்த நிலையில் இருப்பது அந்நாட்டு பொருளாதாரத்தின் மோசமான அறிகுறி என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். வட்டி விகிதம் குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை ஊக்கப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் இரவுபகலாக உழைத்து வந்தாலும் ரெசஷன் எனப்படும் மந்தநிலை தவிர்ககமுடியாத ஒன்றாகவே அமெரிக்காவை அச்சுறுத்தி வருகிறது.