டாடாவின் இரு நிறுவனங்கள் இணைய இசைவு..
டாடா கேபிடல் மற்றும் டாடா மோட்டார் பைனான்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் இசைவு தெரிவித்துள்ளது. இணைப்பு தொடர்பாக கடந்த ஜூன் மாதமே அறிவிப்பு வெளியாகி இருந்தாலும் அதற்கு இந்திய போட்டி ஆணையம் செவ்வாய்க்கிழமைதான் ஒப்புதல் அளித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 4 ஆம் தேதி டாடா கேபிடல் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க முயற்சி நடந்தது. தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மூலமாக இந்த இணைப்புக்கு வழிவகை செய்யப்பட்டது. வளர்ந்து வரும் முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், தேவையில்லாத வணிகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையில் இந்த இணைப்பு நடந்துள்ளது. 2024 நிதியாண்டில் மட்டும் டாடா கேபிடல் லாபமாக 3150கோடி ரூபாயும், டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் வரிக்கு பிறகான லாபம் 52 கோடி ரூபாயாகுமாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.