இந்தியாவின் முதல் சிப் தயாரிக்க உள்ள டாடா..
டாடா குழுமத்தின் டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இணைந்து முதல் மேட் இன் இந்தியா சிப்களை வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்களுக்கு சிப்களை வடிவமைத்துக் கொடுத்த டிசிஎஸ் நிறுவனம்,தற்போது சொந்தமாக சிப்கள் உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமை தயாரிப்புகளை உருவாக்க உள்ளது. கடந்த பிப்ரவரி மாதமே இது தொடர்பாக 3 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 2ஆலைகளில் மாதம் 50 சிப்கள் வரை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆலை குஜராத்தின் டோலேராவிலும், இரண்டாவது ஆலை அசாமிலும் கூட்டு நிறுவனங்களாக செயல்பட இருக்கின்றன. வரும் 2025 அல்லது 2026-க்குள் அசாமில் சிப் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாக்ஸ்கான் உள்ளிட்ட ஆலைகளுடன் இணைந்து செமி கண்டக்டர் உற்பத்திக்கு டிசிஎஸ் உதவி வருகிறது. 2024 நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் இன்ஜினியரிங் வணிகம் 1.5விழுக்காடு குறைந்துள்ளது. செமி கன்டக்டர் துறையில் எந்த வித தொய்வும் காணப்படவில்லை என்று டாடா நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான ஸ்ரீனிவாச சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்,