வங்கியை விட இங்கதான் அதிக முதலீடுகள்..
2024 நிதியாண்டில் வங்கிகளை விட வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் டெபாசிட் 21 % உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் வங்கிகளின் டெபாசிட் விகிதம் மார்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி13.5%ஆக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணத்தை சேமிக்க நினைப்பவர்கள், தங்கள் பணத்தை ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களில்தான் அதிகம் சேமிக்கின்றனர். இதேபோல் இந்தியா புல்ஸ், நிடோ ஹோம் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும் அதிக டெபாசிட்களை ஈர்த்து வரும் நிறுவனங்களாக உள்ளன. 5 பெரிய வங்கிகளின் FD வட்டி விகிதம் 6 முதல் 7.5%ஆக இருக்கிறது. பொதுமக்கள் தனியார் வங்கியல்லாத நிதிநிறுவனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தொகை 1.03 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2023 நிதியாண்டில் வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் தொகை வெறும் 9.6% ஆகவே இருந்தது. 2024 நிதியாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் 60,151 கோடி ரூபாயும், ஸ்ரீராம் ஃபைான்ஸில் 44444 கோடி ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. BBB ரேட்டிங் உள்ள எந்த ஒரு தனியார் நிறுவனமும் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்களை பெறலாம்.குறைந்தபட்சம் 12 மாதங்கள், அதிகபட்சம் 60 மாதங்கள் வரை சேமித்து வைத்து வட்டி தரலாம். இந்த நிறுவனங்கள் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகள் ஆகியவற்றை தொடங்க நிர்பந்திக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.