அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் இந்துஸ்தான் யுனிலிவர்..
தூங்கி எழுந்தது முதல் மீண்டும் மக்கள் தூங்கும் வரை அதிகம் பயன்படுத்துவது இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன தயாரிப்புகளைத்தான். இந்த நிலையில் ஹவர் கிளாஸ் என்ற புதிய அழகு சாதன பொருளை இந்துஸ்தான் யுனிலிவர் இந்தியாவில் தயாரிக்க உள்ளது. 2004 ஆம் ஆண்டே தயாரிக்கப்பட்ட இந்த பிராண்டை, பின்னர் 2017-ல் யுனிலிவர் நிறுவனம் வாங்கியது. ஏற்கனவே டாட்சா, லிவிங் புரூஃப் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை யுனிலிவர் வைத்திருந்தாலும் இந்தாண்டு ஹவர்கிளாஸை இந்தாண்டு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளினிக்பிளஸ், லக்ஸ், ரின் போன்ற பிராண்டுகளை போல இதிலும் கால் பதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள பாபி பிரவுன், எஸ்டி லாடர் செபோரா ஆகிய பொருட்களுக்கு போட்டியாக ஹவர் கிளாஸ் தயாரிக்கப்படுகிறது. ஏற்கனவே டவ், லாக்மி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் இதே நிறுவனம், புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்தியாவில் இதற்கான தேவை அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளனர். லாரியால், ஷிசெய்டோ ஆகிய இரண்டு அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மக்கள்தொகை அதிகரிப்பால் அழகு சாதனங்களும் அதிகம் விற்பதாகவும் கூறியுள்ளனர். ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனமும் ஜப்பானைச் சேர்ந்த ஷிஷேய்டோ நிறுவனமும் இணைந்து கடந்தாண்டு நார்ஸ் என்ற பொருளை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். லாரியால், மாமா அர்த், நிவியா, நைக்கா ஆகிய நிறுவனங்கள் 33%பங்களிப்பை தரும் நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் இது 42%ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. HUL, procter &gamble நிறுவனங்களின் தயாரிப்பு மட்டுமே 58%ஆக 2027-ல் உயரும் என்று தனியார் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது