இந்தியாவில் பணக்காரர்கள் அதிகரிப்பு..
ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 63%ஆக உயர்ந்துள்ளதாக சென்ட்ரம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை 58ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. இது 49 %வளர்ச்சியாகும். 31,800 பேர் இந்தியாவில் ஆண்டுக்கு 10கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கின்றனராம். 2019-2024 காலகட்டத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாம். இதேபோல் 50லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 25% ஆக உயர்ந்துள்ளது. இந்த தொகை சம்பாதிப்போர் மட்டும் 10லட்சம் பேர் என்கிறது அந்த ஆய்வு நிறுவனம். 10 கோடி ரூபாய்க்கும் அதிகம் சம்பாதிப்போரின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் எனப்படும் CAGR மட்டும் 38லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 5கோடி ரூபாய்க்கும் அதிகமானோரின் சிஏஜிஆர் 40லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் சம்பாதிப்பவர்களின் சிஏஜிஆர் மட்டும் 49லட்சம் கோடி ரூபாயாக கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. பணக்காரர்கள் அதிகரித்து வந்துள்ள போதிலும் அதில் வெறும் 15%பணக்காரர்கள் மட்டுமே இந்த பணத்தை சரியான வ கையில் பயன்படுத்துவதாகவும், இந்த நிர்வகிக்கும் திறமை வளர்ந்த பொருளாதார நாடுகளில் 75%ஆக உள்ளது. இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்கள் , மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் மட்டும் 2023-ல் 1.2 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 2028-ல் இந்த தொகை 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023-28 காலகட்டத்தில் மட்டும் அதிக சொத்து வைத்திருப்போர் மற்றும் பெரும் பணக்காரர்களின் பணம் 13-14% உயரும் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.