4 ஆண்டுகளில் முதல்முறை..
அமெரிக்க பணவீக்கத்தை குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அண்மையில் குறைத்துவிட்டது. 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று நேரத்தில் உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதம், பின்னர் படிப்படியாக பணவீக்கம் குறைந்ததை அடுத்து மீண்டும் குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைக்கும் முதல் வட்டி விகிதம் இதுவாகும். அமெரிக்காவில் பணவீக்க விகிதம் 2 விழுக்காடு என்ற இலக்கை நோக்கி பயணிப்பதால் வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க இலக்கை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2008 ஆம் ஆண்டுதான், உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது, கடன்கள் மீதான வட்டி விகிதம் அரைவிழுக்காடு குறைக்கப்பட்டு இருந்தது. இந்த வட்டி குறைப்பால் அமெரிக்காவில் அடகு பெறும் கடன், வாகனக் கடன், கிரிடிட் கார்டு வட்டி விகிதம் என அனைத்தும் சரியும். மொத்தம் 12 பேர் அடங்கிய குழு அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பில் இடம்பிடித்திருப்பார்கள் . இவர்களில் 11 பேர் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க சம்மதம் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளவர்களின் விகிதம் தற்போது 4.2%ஆக உள்ளது. அடுத்த ஓராண்டில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 4 முறை வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டமிட்டுள்ளது.