வாரிசுகள் 3 பேருக்கும் சேலஞ்ஜ் கொடுத்த வாரன்..
உலகில் மூத்த முதலீட்டாளர்களில் ஒருவராக திகழ்பவர் வாரன் பஃப்பெட். இவருக்கு வயது 94. பெர்க்ஷைர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியாகவும் திகழ்கிறார். இவர் தனது 3 குழந்தைகளுக்கும் 143.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கான செயல்களை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த சவால் குறித்து கருத்து தெரிவித்துள்ள வாரனின் மூத்த மகன், இது சாதாரண விஷயம் இல்லை என்று கூறியுள்ளார். தனது மறைவுக்கு பிறகு பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் அறக்கட்டளைக்கு சொத்துகள் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வாரனுக்கு சூசி என்ற 71 வயது மகளும், ஹாவர்ட் என்ற 69 வயது மகனும், பீட்டர் என்ற 66 வயது மகனும் உள்ளனர். நல்ல காரியங்களுக்காக தனது தந்தை செய்த செயல்களை தாங்களும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஹாவர்ட் குறிப்பிட்டார். 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு வாரனின் வாரிசுகள் 3 பேரும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை நல்ல காரியங்களுக்காக செலவிட்டுள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்காக இதுவரை வாரன் பஃபெட் நிறுவனம் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்துள்ளது. வரும் காலங்களிலும் இது தொடரும் என்று பெர்க்ஷைர் நிறுவனம் தெரிவித்துள்ளது.