ஐ.டி. வன்பொருட்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு..
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினிகள், லேப்டாப்கள், டேப்லட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கான ஒப்புதல் காலம் வரும டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமெனில் புதிய அனுமதி கடிதங்களை பெற வேண்டியிருக்கும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகமான DGFT அமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் ஐடிசார்ந்த வன்பொருட்கள் இறக்குமதிக்கு வரும் 30 ஆம் தேதி வரை மட்டுமே கெடு இருந்த நிலையில் அதனை நீட்டிக்க அண்மையில் மத்திய அரசு திட்டமிட்டது. 2023-24 காலகட்டத்தில் மட்டும் 8.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் பொருட்களுக்கு திடீரென தடைவிதிக்கப்பட்டது. இதனால் முன்னணி கணினி நிறுவனங்கள் அலறியடித்து அரசின் உதவியை நாடினார். அப்போது தான், ஐ எம்எஸ் என்ற முறையை அரசு கொண்டுவந்தது. வெளிநாட்டு தயாரிப்புகளாக இருந்தாலும் அவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முன்னணி பிரபல நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.