கடன் சொத்துகளை விற்கும் எச்டிஎப்சி..
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி, தனது கடன் சொத்துகளை விற்று அதன் மூலம் 60 முதல் 70 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிடிட் மற்றும் டெபாசிட் விகிதத்தையும் வங்கியின் பணப்புழக்கத்தையும் நிர்வகிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் மீதான விற்பனையை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எச்டிஎப்சி நிறுவனத்துடன் கடந்தாண்டு ஜூலையில் எச்டிஎப்சி வங்கி நிறுவனமும் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் டெபாசிட் அளவு குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் சொத்துகளை விற்பது பற்றி எச்டிஎப்சி நிறுவன அதிகாரிகள் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 60-70 ஆயிரம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் விற்கும் முடிவு சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்ளேஸ், சிட்டி வங்கி, ஜேபி மார்கன் மற்றும் இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியிடமும் ஹெச்டிஎப்சி சில கடன் சொத்துகள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.