ஜீரோதா நிறுவனர் அளித்த அதிர்ச்சி..
இந்திய பங்குச்சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டமைப்பு அமலானால் வருவாயில் 40 முதல் 60 % வரை குறையும் என்று ஜீரோதா நிறுவனத்தின் உரிமையாளர் நிதின் காமத் எச்சரித்துள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் பெரிய நிதி இழப்பு இருக்கும் என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்டக்ஸ் டெரிவேட்டிவ் குறித்த பங்குச்சந்தைகளின் விதிகளையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஜூலை 1 ஆம்தேதி செபி அறிவித்த சுற்றறிக்கையின் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளை இந்திய சந்தைகள் பின்பற்ற இருக்கின்றன. டுரூ டு லேபில் என்ற நடைமுறையால் வருவாயில் இருந்து 10 விழுக்காடு உயரும் சூழல் ஏற்படும் என்ற அவர் பட்டியலிட்டுள்ளார். புதிய விதிகளில் கான்ட்ராக்ட் அளவை 4 மடங்காக உயர்த்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. ரெபரல் திட்டத்தையும் அவர் எதிர்த்துள்ளார். அப்படி புதிய வாடிக்கையாளர்களை பிடித்துக்கொடுத்தால் அதற்கு தரும் தொகை குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்ககொண்டுள்ளார். ரெபரலை அதிகப்படுத்தினால் உண்மையான வளர்ச்சி இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். டீமாட் கணக்கு தொடங்க தேவைப்படும் தொடக்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், காமத் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது வரை 4லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே பாதுகாப்பு இருப்பதாகவும், இனி இது 10லட்சம் ரூபாய் வரை நிதி பாதுகாப்பு இருக்கும் எனவும், தரகு நிறுவனங்கள் பெரிய அளவு நிதி இழப்பை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எஸ்டிடி வரி உயரப்போகும் நிலையில் ஆப்சன்ஸ் வணிகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் இது ஃபியூச்சர்ஸ் டிரேடிங்கையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.