குஜராத்தில் மட்டும் 8888கோடி ரூபாய் இழப்பு..
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குஜராத்தைச் சேர்ந்த 10.1லட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8888 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் ஒரு மாநிலத்தவர் இழக்கும் அதிகபட்ச தொகையில் இரண்டாவதாகும். பியுச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் என்ற பிரிவில் மட்டும் 86.26 லட்சம் வணிகர்கள் 75,000 கோடி ரூபாய் அளவுக்கு 2023-24 நிதியாண்டில் இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. செபியின் அறிக்கைப்படி, மராட்டியர்கள்தான் நாட்டிலேயே அதிக இழப்பை சந்தித்துள்ளனர்(18.8லட்சம் பேர்), இதற்கு அடுத்த இடத்தில் குஜராத்தியர்கள், 3 ஆம் இடத்தில் உத்தரபிரதேசம், நான்காம் இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கு சராசரி இழப்பாக ஒரு ஆளுக்கு 88,000 ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. மராட்டியர்களுக்கு சராசரியாக 74,000, உ.பியைச் சேர்ந்தவர்கள் 73,000, ராஜஸ்தானியர்கள் 83,000 ரூபாயையும் இழந்துள்ளனர். மராட்டியர்கள் மொத்தமாக 13,912 கோடி ரூபாய் இழந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நாடு முழுவதும் 1.81 கோடி பேர் 1.81 லட்சம் கோடி ரூபாயை பியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் என்ற பிரிவில் இழந்துள்ளனர். மொத்தமாக 76.3% நஷ்டத்தை மட்டுமே சந்தித்து உள்ளதாகவும் 24.4லட்சம் முதலீட்டாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வியடைந்துள்ளனர். 18.6லட்சம் பேர் 3 ஆவது ஆண்டாக தொடர்ந்து தோல்வியடைந்துள்ளனர். 5.8வட்சம் பேர் வர்த்தகமே தேவையில்லை என்று ஓட்டம்பிடித்துள்ளனர். வெறும் 8.3% பேர் மட்டுமே தங்கள் முதலீட்டை லாபகரமாக மாற்றியுள்ளனர். கொரோனாவுக்கு பிறகு பங்குச்சந்தைகளில், குறிப்பாக F&O பிரிவில் முதலீடு செய்தவர்கள் 35 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் பிரிவை அழிவுக்கான பேராயுதம் என்று வாரன் பஃப்பெட் குறிப்பிட்டதை நிரூபிக்கும் வகையில் இந்த இழப்பு நேரிட்டதாக பங்குச்சந்தை மற்றும் வங்கித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.