கச்சா எண்ணெய் விலை சரிவு எச்சரிக்கும் நிபுணர்கள்..
பல நாடுகளில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் விலை குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சீனாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் கடந்த சில நாட்களாக 90 அமெரிக்க டாலர்கள் வரை இருந்த நிலையில் தற்போது அது 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு பேரல் 70 டாலர்களாக விற்பனையாகிறது. விலை உயரும்போது வாடிக்கையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து அதிக பணம் வசூலிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விலை குறையும்போது அந்த சலுகைகளை மக்களுக்கு தருவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தற்போதைய சூழலை மத்திய அரசு கண்காணித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வரும் நாட்களில் திடீரென கச்சா எண்ணெய் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒரே் பேரல் கச்சா எண்ணெய் திடீரென 80 டாலர்களாகவும் விற்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த காரணிகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்தான் பெட்ரோல் ,டீசல் விலை லேசாக குறைக்கப்பட்டது. அதையும் எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் விமர்சித்தனர். இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலை மிகமுக்கிய பங்குகள் வகிக்கின்றன. 2022,2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நஷ்டத்தை எண்ணெய் சுத்தீகரிப்பு மற்றும் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் தற்போது தான் ஈடு செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வருவதால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அளவு மாறாமல் உள்ள நிலையில், செலவு மட்டும் சற்றே குறைந்துள்ளது. கச்சா எண்ணெயை இந்தியா 85% இறக்குமதி செய்தே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.