3 உறுப்பினர்களை அறிவித்த அரசு.,
ராம்சிங், சவ்கதா பட்டாச்சாரியா, நாகேஷ் குமார் ஆகிய 3 பேரையும் ரிசர்வ் வங்கியின் புற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்து ஆணையிட்டுள்ளது. அஷிமா கோயல்,ஜெயந்த் வர்மா, ஷஷாங்கா பிதே ஆகியோரின் ஒப்பந்தம் வரும் 4 ஆம் தேதியுடன் முடியும் நிலையில் இந்த புதிய 3 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. டெல்லி பொருளாதார பள்ளியின் இயக்குநராக இருப்பவர் ராம்சிங், டாக்டர் நாகேஷ்குமார் தொழில் வளர்ச்சி படிப்புகளின் தலைமை செயலாளர் மற்றும் இயக்குநராவார். இதேபோல் சவ்கதா பட்டாச்சார்யா ஒரு பொருளாதார நிபுணராவார். இவர்கள் மூவரும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவர். அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட சில நாட்களில் இந்தியாவில் புதிய உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்., பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வரும் நிலையில் புதிய உறுப்பினர்கள் கருத்தும் கவனம் பெற்றுள்ளது. 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழு கூட்டத்தில்தான் க ன்கள் மீதான வட்டி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதில் 3 உறுப்பினர்கள் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள், 3 பேர் புற உறுப்பினர்கள்.சக்திகாந்ததாஸ், டி.வி.சோமநாதன், அஜெய் சேத் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுதான் புற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். இந்தியாவில் மத்திய வங்கியின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் புற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.