ஜிஎஸ்டி செஸ் வரி முழுமையாக முடிகிறதா?
சில பொருட்களுக்கு காம்பன்சேஷன் செஸ் என்ற வரி நடப்பு நிதியாண்டில் முடிகிறது. இந்நிலையில் அந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரம்பை உயர்த்த ஜிஎஸ்டி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்., குறிப்பாக சிகரெட், புகையிலைப்பொருட்கள், கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள், உயர் ரக ஆட்டோமொபைல்கள், தற்போது 28விழுக்காடு ஜிஎஸ்டி வரம்பில் உள்ளன. அதன் மீதான செஸ் 28%க்குள்ளேயே அடங்கியுள்ளது. இந்நிலையில் காம்பன்சேஷன் செஸ் வரி 11 முதல் 290 விழுக்காடு வரை மார்ச் 2026-க்குள் மாற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவெடுத்துள்ளது. நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி தலைமையிலான 10 பேர் கொண்ட குழு எந்த பொருளுக்கு எவ்வளவு செஸ் விதிக்கலாம் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க இருக்கின்றனர். ஆரம்ப நிலையிலேயே இந்த விவாதம் இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து இந்த குழு ஆராய்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அறிக்கை அளிக்கும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்பையிலேயே செஸ் வரி மாற்றுவது குறித்து இறுதி முடிவு வரும் என்று கூறப்படுகிறது. பல பிரபல மருந்துகள் தற்போது 12%ஜிஎஸ்டி வரம்பில் உள்ளன. இதனை 5%ஆக குறைக்கும்பட்சத்தில் அரசுக்கு 11,000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் அதனை செஸ் மூலம் சரிகட்ட பணிகள் நடைபெறுகின்றன. வரும் 19 ஆம் தேதி அமைச்சர்கள் கூட்டம் அமர்ந்து பேசி, காப்பீட்டு பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர். வரும் 20 ஆம் தேதி இறுதி முடிவு வரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.