எண்ணெய் வாங்குவதில் ஆர்வம் காட்டும் இந்தியா..
உலகில் போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகவும், ஆற்றல் பற்றாக்குறையை இந்தியா எளிதில் சமாளிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறியுள்ளார். இந்தியாவின் எரிபொருள் தேவை அதிகம் உள்ளது பற்றி அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ஒரு நாடு அல்ல, மொத்தம் 39 இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு 27 இடங்களில் மட்டுமே கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் 85 விழுக்காடு எரிபொருள் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாத தரவுகளின்படி, ரஷ்யாவிடம் இருந்து தான் இந்தியா அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து 44விழுக்காடு எண்ணெயை கடந்த ஜூலையில் இந்தியா இறக்குமதி செய்தது. அதாவது ஒரு நாளைக்கு 20லட்சத்து 70 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் ஒரு நாளில் இறக்குமதி செய்யப்படுகிறது. இது கடந்தாண்டைவிட 12விழுக்காடு அதிகமாகும். இதனிடையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் கச்சா எண்ணெயை தூய்மைப்படுத்தும் அளவை அதிகரித்துள்ளது. கடந்த 2024 நிதியாண்டில் மட்டும் இந்தியகச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அளவு 257 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. உள்ளூர் தேவை, வெளிநாட்டு ஏற்றுமதி உள்ளிட்ட காரணகளால் ஆண்டுக்கு 60 முதல் 65 மெட்ரிக் டன் உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு சராசரியாக 4 விழுக்காடு உயர்ந்துள்ளது.