மறைந்தார் ரத்தன் டாடா..
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. வயது சார்ந்த பிரச்சனைகளால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1937 ஆம் ஆண்டு செல்வ செழிப்பான குடும்பத்தில் பறிந்த ரத்தன் டாடா, அமெரிக்காவில் படித்தவர், தாய் தந்தை இருவரும் இவருடன் இல்லை என்ற போதும் இவரை பாட்டி தான் வளர்த்துள்ளார். கடைசி மூச்சு வரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் ரத்தன் டாடா. நிதி, காப்பீடு, பொழுதுபோக்கு, வீட்டு உபயோக பொருட்கள் என ரத்தன் டாடா கால்வைக்காத துறையே இல்லை எனலாம். டாடா குழுமத்தின் பிரதான அமைப்பான டாடா சன்ஸின் தலைவராக இரண்டு முறை இருந்தார். வயது முதிர்வு காரணமாக மும்பையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலைகடந்த சில நாட்களுக்கு முன்பு அவரே மறுத்திருந்தார். 4 முறை திருமணத்துக்கான வாய்ப்புகள் இருந்தும் அவர் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. ஒரே ஒருவர் கூட ரத்தன் டாடாவை பிடிக்காது என்று சொல்லும் அளவுக்கு அத்தனை பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் மறைவுக்கு, இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெரிய பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, உள்ளிட்ட பிரபலங்களும், தொழில்துறையைச் சேர்ந்த தொழிலதிபர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்