மின்சார வாகன பேட்டரி விலை குறைகிறது..
மின்சார வாகனங்களின் பேட்டரிகள் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் பாதி அளவுக்கு விலை குறையும் என்று பிரபல கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதன் ஆசிய பசிபிக் தூய்மை ஆற்றல் பிரிவின் இணை தலைவர் நிகில் பண்டாரியிடம் கேட்டோம். அதற்கு அவர் இரண்டு காரணங்களை அடுக்குகிறார். ஒன்று புதிய கண்டுபிடிப்புகள், அதிலும் அதிக ஆற்றல் அடர்த்தி மற்றும் விலையும் குறைவு இரண்டாவது காரணியாக பேட்டரியில் பயன்படுத்தப்படும் உலோகங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதும் முக்கிய காரணிகளாகும். 2023 முதல் 2030 ஆம் ஆண்டுக்குள்ளாக 40 விழுக்காடு அளவுக்கு விலை குறையும் என்றும் கூறப்படுகிறது. செல்லில் இருந்து பேக்கை உற்பத்தி செய்யும் பணிகள்தான் தற்போது நடைபெறுவதாகவும், இதனால் பணம் மிச்சம் என்றும் நிகில் கூறினார். பேட்டரி விலைகள் குறையும்பட்சத்தில் தானாகவே மின்சார வாகனங்களின் விலையும் குறையும் என்பதால் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்,
மேலும் மின்சார கார்கள் மீண்டும் விற்பனை செய்ய பலரும் தயங்கி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கார்களை மாற்றிக்கொண்டே இருக்கும் சிலரையும் பார்க்க முடிகிறது என்றும் நிகில் கூறினார். 2026-ல் மின்சார வாகன சந்தை பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அதற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் நிகில் கருத்து தெரிவித்தார்.