டிவி, ஏசிக்கு ஊக்கத்தொகையா?
இந்தியாவில் டிவி மற்றும் ஏசியின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய ஊக்கத்தொகையை அளிக்க திட்டமிட்டுள்ளது. டிவிகள் தயாரிப்பில் ஓபன் செல்கள் உள்ளன, இதன் மீதான வரி கடந்தாண்டு 5-ல் இருந்து 2.5%ஆக குறைக்கப்பட்டது. உள்ளூர் உற்ப்த்தியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட வரியை முழுமையாக நீக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 32 அங்குலத்துக்கும் அதிகமான அளவுள்ள தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இந்த சலுகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி பெட்டிகளின் வெளிப்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் அமைப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி தற்போது 28%இருக்கும் நிலையில் இதனை 18%ஆக குறைக்கவும் மத்திய அரசிடம் திட்டம் இருக்கிறதாம். டிவியைப் போலவே ஏசிக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையை மத்திய அரசு அளிக்க திட்டமிட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், தற்போதுள்ள 28 % உற்பத்தியை 45%ஆக உயர்த்தவும் இந்த முயற்சி கையில் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இந்த அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் விரைவில் அமலாகும்பட்சத்தில் இந்திய தொலைக்காட்சி வட்டாரங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்