லஞ்சம் தவிர்த்த ரத்தன் டாடா..
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா கடந்த 9 ஆம் தேதி உடல்நலக்குறைவால் 86 வயதில் காலமானார். இந்நிலையில் அவர் உயிருடன் இருக்கும்போது அமைச்சர் ஒருவருக்கு 15 கோடி ரூபாய் லஞ்சத்தை தவிர்த்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை பல ஆண்டுகளுக்கு பிறகு டாடா குழுமமே வாங்கியது. இந்த சூழலில் வேலை ஒன்றை முடித்துத் தர 15 கோடி ரூபாய் அமைச்சருக்கு லஞ்சம் தர வேண்டும் என்று சக தொழிலதிபர் ஒருவர் ரத்தன் டாடாவிடம் கூறினார். இதற்கு பதில் அளித்தல ரத்தன் டாடா, தாம் நேர்மையாக இருப்பதாகவும், நேர்மையாக இருப்பதால் எனது நோக்கம் அதிகாரிகளுக்கு புரியாது என்றும் கூறியுள்ளார். சுயகட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்று கூறிய ரத்தன் டாடா, கடைசி வரை அந்த லஞ்சத்தை தவிர்த்தார். 1937ஆம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடா, தனது வாழ்நாளில் மிகவும் நேர்மையானவராகவே வாழ்ந்திருக்கிறார். மாற்றம் நிகழ வேண்டும் என்ற ஒற்றை வார்த்தையில் தம்மை நினைவில் வைத்தால் போதும் என்றுடாடா மிகவும் எளிமையாக பேசி மக்கள் மனங்களை கவர்ந்தார், டாடா குழுமத்தை 1991 முதல் அழகாக கட்டமைத்த பெருமை ரத்தன் டாடாவுக்கு உண்டு. ரத்தன் டாடாவின் சமூக நலம் சார்ந்த பங்களிப்பு அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.