ஓலாவில் தணிக்கை நடத்த ஆணை..
இந்தியாவில் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறப்பான சேவை அளித்ததாகவும், நாளடைவில் சேவையில் பாதிப்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. விற்பனைக்கு பிந்தைய சேவையில் குறைபாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய கனரக தொழில் அமைச்சகம் தணிக்கை நடத்த ஆணையிட்டுள்ளது. பழுது நீக்கம் மற்றும் காலதாமதமான சேவைகள், முறையற்ற ரசீதுகள் தொடர்பாக 10ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்துள்ளதால் தணிக்கை நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவுடன் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் செய்ததால் ஓலாவின் பங்குகள் கடந்த வாரம் 40 % குறைந்துள்ளது. தணிக்கையில் புகார்கள் பெரிய அளவில் இருக்கும்பட்சத்தில் அரசு தரும் ஊக்கத்தொகை கிடைக்காமல் போகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ARAi என்ற அமைப்பு மத்திய அரசின் தணிக்கையில் ஈடுபட இருக்கிறது. ஓலா நிறுவனத்தில் கடந்தாண்டு 10 மாநிலங்களில் 35 இடங்களில் நடந்த திடீர் ஆய்வின்போது, போதுமான பணியாளர்கள் இல்லை என்பது தெரியவந்தது.