ஹியூண்டாய் ஐபிஓ நிலவரம் என்ன?
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை முதல் நாளிலேயே 18 விழுக்காடு மக்கள் வாங்கியுள்ளனர். அந்நிறுவனம் 27,870 கோடி ரூபாய் அளவுக்கு நிதியை திரட்ட தன்வசம் இருந்த பங்குகளில் 14.2 கோடி பங்குகளை ஹியூண்டாய் நிறுவனம் வெளியிட்டு ஆரம்ப பங்கு வெளியீட்டு முறையில் பணம் பெற்று வருகிறது. இதேபோல் சில்லறை வகையில் 26 % முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர். அதாவது 1.3கோடி பங்குகள் இதுவரை வாங்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் சாராத தனிநபர்கள் முதலீடு என்பது 27.66லட்சமாக உள்ளது. இது மொத்ததில் 13%ஆகும். அந்நிறுவன ஊழியர்கள் 6.19லட்சம் பங்குகளை வாங்கியுள்ளனர். அந்நிறுவன ஊழியர்களுக்கு மொத்தம் 7.78லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 80 விழுக்காடு வரை ஹியூண்டாய் நிறுவன ஊழியர்கள் வாங்கியுள்ளனர். இந்த ஐபிஓ வரும் 17 ஆம் தேதி வியாழக்கிழமை முடிவடைய இருக்கிறது. கடந்த 14 ஆம் தேதியே பிரபல முதலீட்டாளர்கள் வாயிலாக 8,315 கோடி ரூபாய் நிதியை ஹியூண்டாய் நிறுவனம் திரட்டியுள்ளது. சிங்கப்பூர் அரசாங்கம், நியூ வேர்ல்டு, அமெரிக்க நிதி காப்பீட்டு சீரிஸ், நியூ வேர்ல்டு ஃபண்ட் உள்ளிட்டவை வாயிலாக ஹியூண்டாய் நிறுவனத்துக்கு 2,191 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
ICICI Prudential Mutual Fund (MF), HDFC MF, SBI MF, Nippon India MF, Kotak MF, Axis MF, Aditya Birla Sun Life MF, UTI MF ,Bandhan MF உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த முதலீட்டில் பங்கேற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் தென்கொரிய நிறுவனமான ஹியூண்டாய் வெளியிடும் முதல் பங்கு விற்பனை இதுவாகும்.