5 நாட்களில் ரூ.6913 கோடி வருவாய்?
இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6,913 கோடி ரூபாய் பங்குச்சந்தை வருமானம் ஈட்டியுள்ளது. 1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை நாராயணமூர்த்தி தொடங்கி இதுவரை வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8.03லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திகழும் நிலையில் இதற்கு அடுத்த இடத்தில் டிசிஎஸ், எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசயைில் இன்போசிஸ் இணைந்துள்ளது. மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு 6 ஆவது இடம் கிடைத்துள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி நிலவரப்படிஇன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1,966 ரூபாயாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான டிசிஎஸின் சந்தை மதிப்பு கடந்தா வாரம் 35,638 கோடி ரூபாய் சரிந்தது, இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பும் கடந்த வாரத்தில் 21,351 கோடி ரூபாய் அளவுக்கு சரிவை கண்ட நிலையில் இன்போசிஸ் நிறுவனம் மட்டும் லாபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.