விப்ரோ போனஸ் அறிவிப்பு..
பிரபல டெக் நிறுவனமான விப்ரோவின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்த நேரத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு விப்ரோ நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த வங்கியின் வருவாய் உள்ளிட்ட அம்சங்கள் வெளியிடும்போதே, ஒரு பங்குக்கு ஈடாக இன்னொரு போனஸ் பங்கு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்தியாவின் நான்காவது பெரிய டெக் நிறுவனமான விப்ரோவில் போனஸ் பங்கின் ஈக்விட்டி பங்கு மதிப்பு 2 ரூபாய் . ஒப்புதல் அறிவிப்பு வெளியானதில் இருந்து 2 மாதங்களுக்குள் போனஸ் பங்குகள் வெளியிடப்பட இருக்கின்றன. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது. போனஸ் பங்கின் அறிவிப்பு வெளியானதும் அதனை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். போனஸ் பங்குகளின் ரெக்கார்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் மட்டுமே 3,208 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 2,646கோடி ரூபாயாக இருந்தது. அந்நிறுவனத்தின் செயல்பாட்டு நிதி 42.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அந்நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு 44 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விப்ரோவில் இருந்து வெளியேறும் பணியாளர்களின் விகிதம் 14.5 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் வரையிலான காலகட்டத்தில் விப்ரோ நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 2லட்சத்து 33 ஆயிரத்து 889 ஆக உள்ளது.