ஹியூண்டாய் ஐபிஓ ஜெயித்ததா?தோற்றதா?
அண்மையில் 14.2 கோடி பங்குகளை விற்று ஆரம்ப பங்கு வெளியீடை செய்ய ஹியூண்டாய் நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த பங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஹியூண்டாய் நிறுவனத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 1998-ல் இந்திய சந்தைகளில் கால்வைத்த அந்நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாகத்தான் இருந்து வருகிறது என்றபோதும், ஆரம்ப பங்கு வெளியீட்டில் மக்களை பெரியளவில் ஈர்க்கவில்லை. அவர்கள் செய்த தவறுகள் என்ன பார்க்கலாம்.? முதல் தவறு அதிக விலையில் ஹியூண்டாய் ஐபிஓ வெளியிட்டது தவறு என்கிறார்கள் நிபுணர்கள். குறைந்தவிலை வைத்திருந்தால் மக்கள் அதிகம்பேர் வாங்கியிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. நீண்டகால பயன்பாட்டுக்கு ஹியூண்டாய் ஐபிஓ உகந்ததாக இருந்திருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் இந்தியாவில் இருந்து பெறப்படும் முதலீடுகள் கொரியாவுக்கு சென்றது இரண்டாவது தவறாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தனியாக ஒரு பிரிவு இயங்கி வந்தாலும் அதன் மூலதனம் அனைத்தும் தென்கொரியாவுக்கே செல்வதை பலரும் விரும்பவில்லை. அடுத்ததாக ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பேங்க் பேலன்சும் முதலீட்டாளர்களை சந்தேகப்பட வைத்தது. 32,000 கோடி ரூபாயை அடுத்த 10 ஆண்டுகளில் முதலீடு செய்யப்போவதாக ஹியூண்டாய் நிறுவனம் அறிவித்தபோதும், இந்த தொகை வெளியில் இருந்து கடனாகத்தான் வாங்கப்போகிறார்களா என்ற கேள்வி பலமாக எழுந்தது. கையிருப்பில் வெறும் 8 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே இருக்கும் என்பதே மிகப்பெரிய நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியது. கொரிய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு டிவிடன்ட் தருவதாக அறிவித்தும் இந்திய சந்தைகளில் ஹியூண்டாய் சரிய காரணமாக அமைந்தது.