22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

காப்பீடு மீதான ஜிஎஸ்டி அப்டேட்..

இந்தியாவில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பியே வலியுறுத்தும் அளவுக்கு காப்பீடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இந்த சூழலில் ஜிஎஸ்டியில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து அனைத்து மாநில அமைச்சர்கள் கலந்து பேசி ஒரு முடிவை எட்ட இருக்கின்றனர். அண்மையில் பிகாரில் நடந்த ஜிஓஎம் எனப்படும் அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான வாட்ச், ஷூக்களுக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது. தற்போது இந்த பொருட்களுக்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது இதேபோல் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி 18-ல் இருந்து 5 விழுக்காடாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. 20 லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் பாட்டிலுக்கு 18-க்கு பதிலாக 5 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சைக்கிள்களுக்கு 5 விழுக்காடாகவும், பாட புத்தகங்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியும் விதிக்க அமைச்சர்கள் பரிந்துரைத்தனர். எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வசூலிப்பது என்பது குறித்து இறுதி முடிவு வரும் 31 ஆம் தேதிக்குள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *