டாடாவில் மேலும் ஒரு ஐபிஓவா?
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து விலகும் நிலையில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14%ஏற்றம் கண்டுள்ளன. இதன் தாக்கம் டாடா இன்வெஸ்ட்மன்ட் கார்பரேஷன் நிறுவனத்திலும் காண முடிந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 9.5% மும்பை பங்குச்சந்தையில் உயர்ந்துள்ளன.
அடுத்தாண்டு செப்டம்பரில் டாடாசன்ஸ் நிறுவனம் மீண்டும் பங்குச்சந்தைக்குள் வர இறுக்கிறது. கடன்களை சரி செய்யும் முயற்சியில் டாடா சன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டாடா சன்ஸின் மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் அதில் 5 விழுக்காடு பங்கை வெளியிட்டு ஆரம்ப பங்கு வெளியீடும் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது 55,000 கோடி ரூபாய்க்கு ஆரம்பப் பங்கு வெளியிடப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்று கூறப்பட்ட ஹியூண்டாயின் ஆரம்ப பங்கு வெளியீட்டை டாடா கெமிக்கல்ஸ் அல்லது டாடா சன்ஸ் உடைக்கும் என்று சந்தையில் பரவலாக ஒரு பேச்சு உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 65.9% டாடா டிரஸ்ட் நிறுவனத்துக்கும், 18.4%ஷபூர்ஜி பலோன்ஜி மற்றும் டாடா குழுமத்துக்கு 12.8% மற்றும் 2.8 விழுக்காடு டாடா குடும்பத்திற்கும் செல்லும். மொத்த பங்குகளில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் 3 % பங்குகளை கொண்டுள்ளது. மார்ச் மாத நிலவரப்படி, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன அளவு 30,000 கோடி ரூபாயை கடந்துள்ளது. பங்குச்சந்தை வர்த்தகம் முடியும் போது டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 9.2%அதிகரித்து ஒரு பங்கு 1188 ரூபாயாக இருந்தது. டாடா முதலீட்டு குழுமத்தின் பங்குகளும் விலை உயர்ந்து ஒரு பங்கின் மதிப்பு 7ஆயிரத்து 59 ரூபாயாக இருந்தது.