நீண்டகால திட்டத்தில் அசத்தும் பஜாஜ்..
இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் 7 விழுக்காடு வரை அண்மையில் உயர்ந்தன. இதற்கு பிரதான காரணம் பஜாஜ் நிறுவனம் தனது உற்பத்தியை மேலும் அதிகரித்ததுதான். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ராஜிவ் பஜாஜ் இருக்கிறார். பஜாஜ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. இதன் காரணமாக லேசான சரிவும் பங்குச்சந்தைகளில் காணப்பட்டது. பின்னர் நீண்டகால அடிப்பையில், வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ராஜிவ் குறிப்பிட்டார். தனது கணிப்பின்படி நீண்டகால அடிப்படையில் தங்கள் நிறுவன பங்குகள் ஒன்றின் விலை 20ஆயிரம் ரூபாயாக உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் உள்நாட்டு மின்சார வாகன சந்தையின் மதிப்பு 20 விழுக்காடாக இருப்பதாகவும், அதே நேரம் அதில் லாபம் மிகவும் குறைவு என்றும் பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருசக்கரவாகனங்களின் விற்பனை குறைந்துள்ளதாக கூறியுள்ள அந்த அதிகாரி, பண்டிகை காலங்களில் வெறும் 1-2%வளர்ச்சி மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். தனது நிறுவனம் 125 சிசிக்கும் அதிகமான பிரிவில் 40விழுக்காடுக்கும் அதிகமாக வளர்ந்து வருவதாகவும், தங்கள் நிறுவனம் அக்டோபர், நவம்பரில் அதிக வாகனங்களை தயாரிக்கும் என்றும் ராஜிவ் கூறியுள்ளார். பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் சராசரியாக 10,338 ரூபாயாக ஒரு பங்கு விற்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையில் முதலீடு செய்தவர்களுக்கு மட்டும் 53 விழுக்காடு அதிக லாபம் கிடைத்துள்ளது.