விதிகளை கடுமையாக்கும் செபி..
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உள் வணிகம் நடக்கும் பரஸ்பர நிதியில் விதிகளை கடுமையாக்க செபி அமைப்பு திட்டமிட்டுள்ளது. புதிய விதிப்படி, சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்கள், சொத்துக்கள் நிர்வகிக்கும் நபர்கள், அறங்காவலர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் பெயர்களையும் சேர்க்க வேண்டும். இந்த புதிய விதி நவம்பர் 1 ஆம் தேதி முதல் காலாண்டு அடிப்படையில் அமலாக இருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான யூனிட்கள் ஒதுக்கும்போது சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பரிவர்த்தனை நடந்ததில் இருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் இதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை உச்சபட்ச அளவாக வைக்க வேண்டும் என்றும், ஒரு காலாண்டில் இதை தாண்டக்கூடாது என்றும் புதிய விதி கூறுகிறது. இந்த பண வரம்பு என்பது சொத்து நிர்வகிக்கும் நிறுவனம், அறங்காவலர்கள்,மற்றும் சொத்து யார் பெயரில் இருக்கிறதோ அவர்களின் உறவினர்கள் ஆகியோருக்கு பரிவர்த்தனை குறித்து தெரிவிக்க வேண்டும், பான் எண்ணின் அடிப்படையில் இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படவேண்டும். 6.6.2.1, 6.6.2.3உட்பிரிவு Fஆகிய விதிகளை செபி மாற்றியுள்ளது. 30 நாட்களுக்குள்ள பரிவர்த்தனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு உண்டான காரணத்தை தகுந்த முறையில் தெரிவிக்க வேண்டும். முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கவே இந்த விதிகளை கடுமையாக்குவதாகவும் செபி தெரிவித்துள்ளது.