டாடா, பஜாஜை மிஞ்சிய வாரி எனர்ஜிஸ்..
வாரி எனர்ஜீஸ் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் டாடா மற்றும் பஜாஜை மிஞ்சியுள்ளது. சோலார் தகடுகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் அண்மையில் ஆரம்ப பங்குகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 76 மடங்கு அதிகம் வாங்கப்பட்டுள்ளது. 97.34லட்சம் பேர் இந்த நிறுவன பங்குகளை வாங்கியுள்ளனர். 4,321கோடி ரூபாய் நிதியை வசூலிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 97.34லட்சம் முறை வாங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஐபிஓ 73லட்சம் முறை வாங்கப்பட்டதே சாதனையாக இருந்தது. 2,10,79,384 பங்குகள் விற்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 2லட்சத்து 41 ஆயிரத்து 857 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது. 3,600 கோடி ரூபாய்க்கு ஈக்விட்டியாகவும், நிறுவனபங்குகளை ஓஎஃப் எஸ் வகையில் 48லட்சம் ஈக்விட்டி பங்குகளும், என 4,321 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கத் திட்டமிடப்பட்டது. ஒரு பங்கின் விலை 1,427 ரூபாயில் இருந்து 1503 ரூபாயாக இருந்தது. இதில் 65 கோடி ரூபாய் என்பது தனது பணியாளர்களுக்கு அந்நிறுவனம் ஒதுக்கியது. 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சோலார் தகடுகளை செய்து வருகிறது. குஜராத்தில் சூரத், டும்ப், நந்திகிராம்,சிக்லி உள்ளிட்ட பகுதிகளிலும். உத்தரபிரதேசத்திலும் உற்பத்தியை செய்தது.