மீண்டும் சந்தையில் சரிவு….
அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து 80,065 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் குறைந்து 24,399 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் , மஹிந்திரா அண்ட் மஹிந்த்ரா, டைட்டன் மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. இந்துஸ்தான் யுனிலிவர், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பனி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. அக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை ஆபரணத்தங்கம் விலை
சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து285 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 280ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 110 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்