தங்கத்துக்கு ஹால்மார்க்..எவ்வளவு செலவாகும்…
தங்கத்தை விற்கும் ஒவ்வொரு நிறுவனமும் 6 இலக்க குறியீடு அளிக்க வேண்டும் என்ற விதி, கடந்தாண்டு ஜூலை 1 முதல் அமலில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை என்பது வழங்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளிக்கு மட்டுமே தூய்மைக்கான ஹால்மார்க் முத்திரை அளிக்கப்படுகிறது. ஹெச்யு ஐடி என்ற நடைமுறை கடந்த ஜூலை 2021 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பிஐஎஸ் முத்திரையுடன், 3 இலக்க எண்ணுடன் சேர்ந்து 6 இலக்க குறியீடாக இருக்கிறது. தங்க நகைகளை ஹால்மார்க் மற்றும் 6 இலக்க எண்களாக மாற்ற ஒரு நகைக்கு 45 ரூபாய் கட்டணமாக விசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இவை தவிர்த்து தங்கத்தின் மீதான ஹால்மார்க்குக்கு வரிகளும் தனியாக உள்ளன. இதேபோல் வெள்ளி ஒரு நகைக்கு ஹால்மார்க் கட்டணமாக 35 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வெள்ளியின் குறைந்தபட்ச கட்டணம் 150 ரூபாய் மற்றும் அதற்கு உண்டான வரி கட்ட வேண்டியிருக்கும்.
செய்கூலி, சேதாரம் இல்லாமல் தனித்தொகையாகத்தான் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளால் அதன் தூய்மைக்கு சான்று கிடைக்கும். எனவே அந்த நகைகளுக்கு மதிப்பு உயரும். ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளுக்கு பில் வாங்குவது அவசியமாகிறது. ஒரு ஜோடி நகையாக வாங்கும்போது, இரண்டு ஆபரணங்களிலும் ஹால்மார்க் முத்திரை இருப்பது சிறந்தது. தனிநபரும் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்க முடியும், அதற்கு கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.bis.gov.in என்ற இணையதளத்தில் தகவல்களை பெற முடியும்