ஐடிசி 2-ஆவது காலாண்டு முடிவுகள்..
ஐடிசி நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மார்ஜின் தொகை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக பதிவாகியுள்ளது. மார்ஜின் தொகை 470 புள்ளிகள் குறைந்து 32.8விழுக்காடாக சரிந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை, அதிக உணவுப் பொருட்கள் விலை உயர்வு, உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ஜின் சரிந்தது. மார்ஜின் சரிந்தபோதும், ஐடிசி நிறுவனத்தின் லாபம் 3விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஐடிசி நிறுவனத்தின் லாபம் 5 ஆயிரத்து 78 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. ஐடிசி நிறுவனத்தின் வருவாய் 16 விழுக்காடு உயர்ந்துள்ளது அதாவது ஆண்டுக்கு ஆண்டு வருவாய் 16 விழுக்காடு இரண்டாம் காலாண்டில் உயர்ந்து 19 ஆயிரத்து 327 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 4927 கோடி ரூபாய் அளவுக்கு சிகரெட்டில் வரும் வருவாய் மட்டும் 6.79 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு சிகரெட் வருவாய் 7657 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது இந்த வருவாய் 8177 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சிகரெட் இல்லாமல் மற்ற உணவுப்பொருட்கள் விற்பனை 5.4விழுக்காடு உயர்ந்து 5577 கோடி ரூபாய் வருவாயாக இருக்கிறது.