நகர்புற கடைகளுக்கு சவால் விடும் தீபாவளி விற்பனை..
இந்தியாவில் நகர்புறங்களில் உள்ள கடைகளில் தீபாவளி விற்பனை குறைந்து கொண்டே செல்வது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் 25 முதல் 30 விழுக்காடு வரை விற்பனை சரிந்திருக்கிறது. நகர்புறங்களில் ஆன்லைன் விற்பனைதான் சூடுபிடித்து வருகிறது. பிரபல நிறுவனங்களான டாபர், நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்கள், பொதுவான வணிகம் மற்றும் வாடிக்கையாளரின் செயல்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கிறது. கடைகளை நடத்துவதே சிரமமாக மாறியுள்ளது. உள்ளூர் விற்பனையில் 8.3 விழுக்காடு மக்கள் ஆன்லைன் வணிகத்துக்கு மாறியுள்ளதாக பிரபல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேகி மற்றும் நெஸ்கஃபே காபியை விற்கும் நெஸ்ட்லே நிறுவனம், தங்கள் விற்பனை 38 விழுக்காடு வரை இணையத்தில் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் 1கோடியே 30லட்சம் கடைகள் இருக்கின்றன. இரண்டு மற்றும் 3 ஆம் நிலை சந்தைகளில் 85விழுக்காடு விற்பனை நடக்கிறது. கடந்தாண்டு தீபாவளியில் நடந்த வியாபாரத்தை விட மிகக்குறைந்த அளவிலேயே நகரங்களில் தீபாவளி விற்பனை நடந்துள்ளதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். பிரபல நிறுவனமான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனமும் மின்வணிகத்தில் அதிக முதலீடுகளை செய்துள்ளனர்.