6.80லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்..
அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 662 புள்ளிகள் குறைந்து 79,402 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 218 புள்ளிகள் குறைந்து 24,180 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக ,இந்திய பங்குச்சந்தைகளில் 6லட்சத்து80 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. ITC, Sun Pharma, Britannia Industries, HUL, Axis Bankஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. IndusInd Bank, BPCL, Adani Enterprises, Shriram Finance, M&M ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோகப் பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் சரிவில் முடிந்தன. குறிப்பாக ஆட்டோமொபைல், உலோகம், எண்ணெய் மெற்றும் எரிவாயுத்துறை பங்குகள், டெலிகாம் மற்றும் ஊடகத்துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு அளவுக்கு சரிவை கண்டன. அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் விலைசவரனுக்கு 80ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்10 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து295 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 360ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 107 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து7 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.