5 நாட்கள் சரிவுக்கு வந்தது முடிவு….
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 80,005 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 158 புள்ளிகள் உயர்ந்து 24,339 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. Shriram Finance, Adani Enterprises, ICICI Bank, Eicher Motors ,Wipro,ஆகிய நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து முடிந்தன. Coal India, Bajaj Auto, Axis Bank, Kotak Mahindra Bank, Hero MotoCorpஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. பொதுத்துறை வங்கிகள் 3.8 விழுக்காடு உயர்வு கண்டன. உலோகத்துறை இரண்டரை, மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் தலா 1 விழுக்காடும் உயர்ந்தன. Anup Engineering, CarTrade Tech, Cigniti Technologies, Coforge, Deepak Fertiliers, Firstsource Solutions, Kirloskar Pneumatic, Poly Medicure, Sharda Crop, Thyrocare Technologies,உள்ளிட்ட 130க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உயர்வை கண்டன. அக்டோபர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது ஒரு கிராம் தங்கம் 45 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து 315 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி 107 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.