“தொடங்கியது 3ஆம் உலகப் போர் “
மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர், ஜேமி டைமன். இவர் உலகப்போர் தொடர்பாக பேசியுள்ளார். உக்ரைன் மற்றும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அதன்படி,ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கு அதிகரித்து உள்ளது என்றார். இந்த போர்களால் ரிஸ்க் மிக மிக அதிகம் என்று கூறிய அவர், மூன்றாவது உலகப்போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றார். உலகளாவிய பிரச்சனைகளால் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஜேமி டைமன் தெரிவிப்பார். சமீபத்திய போர்களால் உலகில் பெரிய பாதிப்பு ஏற்படுவதாக ஜேமி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மற்றும் இஸ்ரேல் ஹமாஸ் போர்கள் உலக அளவில் வரிசையை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். போர்கள் காரணமாக உலகில் அமைதி ஒப்பந்தம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஜெமி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் மிகவும் அபயகரமானது என்றும் ஜேமி தெரிவித்துள்ளார். அணுகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் உலகை பெரும் சவாலுக்கு உள்ளாக்குகிறது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மற்றும்
இஸ்ரேல் இடையிலான போர் ஆகியவை மனித குலத்துக்கு மிகவும் ஆபத்தானது என்றும் பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று ஜேமி சுட்டிக்காட்டி உள்ளார். அமெரிக்க பொருளாதாரம் சீரடைந்து வந்தாலும் பணவீக்கம் கட்டுக்குள் வந்த போதிலும் பல நாடுகளில் நீதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நிலையான மற்றும் சீரான எதிர்காலத்துக்கு மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை மிக முக்கியம் என்று ஜேமி உறுதிபட தெரிவித்துள்ளார்.