உஷாரய்யா உஷார்..
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக உள்ளது hdfc வங்கி. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புதிய மோசடி அதிக அளவில் நடப்பதாக வங்கி எச்சரித்து உள்ளது.
வங்கி விவரங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் விவரங்களை தெரியாத நபர்களிடம் அளிக்க வேண்டாம் என்று எச் டி எஃப் சி வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் நடந்த ரேடியோ உரையில் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த டிஜிட்டல் அரஸ்ட் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். இந்திய அரசின் தரவுகளின் படி 120 கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் மக்கள் பணத்தை இழந்துள்ளனர். டிஜிட்டல் அரஸ்ட் என்பது மோசடி நபர்கள் வீடியோ கால் மூலம் காவல்துறை அதிகாரி போல பேசி வழக்கில் இருந்து வைக்க பணம் தர வேண்டும் என்று மிரட்டி பணம் பறிப்பது டிஜிட்டல் அரெஸ்ட். மோசடியில் பணத்தை இழந்தால் உடனடியாக வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் எச்டிஎப்சி வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. டிஜிட்டல் அரஸ்ட் முறையில் பணத்தை இழந்தால் மத்திய அரசின் செக்சு என்ற போர்டலில் தெரிவிக்க வேண்டும் என்றும் எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.