உற்பத்தியில் அசத்தும் இந்தியா..
இந்தியாவில் வன்பொருள் உற்பத்தி அதிக அளவில் நடத்த மத்திய அரசு புதிய திட்டங்களை ஏற்படுத்தி உள்ளது அதன்படி கணினிக்கு தேவையான சர்வர்கள் உள்ளிட்டவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினிகளுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்திருந்தது கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தடையை தளர்த்தியது மத்திய அரசு. உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் மூலமாக கணினிச்சிப்புகள் மற்றும் சி 295 ரக ராணுவ விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. செமி கண்டக்டர் துறையில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் வன்பொருள்கள் தயாரிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் மின்சார வாகனங்களின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்கள் மற்றும் ஏசி மற்றும் எல்இடி விலக்குகள் உற்பத்திக்கும் இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிப்பது குறித்து அரசு பரிசீளித்து வருகிறது. 6962 கோடி ரூபாய் மதிப்புள்ள 66 விண்ணப்பங்கள் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளன.