கால்பங்கு செயற்கை நுண்ணறிவுதான்..
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அண்மையில் தங்கள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசினார். அதில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலமாக 25 விழுக்காடு கோடிங் நடப்பதாக உண்மையை ஒப்புக்கொண்டார். பொறியாளர்கள் அந்த கோடிங் சரியாக இருக்கிறதா என்று பார்க்க மட்டுமே செய்வதாகவும் கூறியுள்ளார். மென்பொருள் நிறுவனத்தில் இது ஒரு அடிப்படையான மாற்றம் என்றும் சுந்தர் குறிப்பிட்டார். மென்பொறியாளர்களின் வேலையை எளிமையாக்குவதாகவும் கூறியுள்ளார். கோடிங் எழுதுவதற்கு பதிலாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, புதுப்புது கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த தனது நிறுவன பொறியாளர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் சுந்தர் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு கோடுகளை எழுதி வரும் நிலையில் அறிமுக அளவில் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. என்னதான் கோடிங்கை செயற்கை நுண்ணறிவு எழுதினாலும் அதில் உள்ள துல்லியத் தன்மையை மென்பொறியாளர்கள்தான் கண்காணிப்பார்கள் என்றும் சுந்தர் குறிப்பிட்டார்.