விநியோகஸ்தர்கள் புகார்..
சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோக பொருட்களுக்கு FMCG என்று பெயர். இந்த நிறுவனங்கள் மீது AICPDF என்ற அமைப்பு பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது காலாவதி தேதி முடியப்போகும் தரவாயில் உள்ள பொருட்களை FMCG நிறுவனங்கள் துரித வர்த்தகம் மற்றும் மின் வணிக நிறுவனங்களின் மூலம் விற்றுவிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்திடமும் இதே புகாரை அந்த விநியோக அமைப்பு அளித்துள்ளது. அதில் இது போன்ற முறையற்ற செயலால் வணிகம் மற்றும் நுகர்வோர் நலன் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மலிவு விலையில் கிடைப்பதால், தரத்தில் சமரசம் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாதுகாப்பு இல்லாத பொருட்களை பொதுமக்கள் மின் வணிகத்தில் வாங்குவதன்மூலம் மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக கூறியுள்ளது. மேலும் இணையத்தில் விற்கப்படும் பொருட்களின் காலாவதி தேதியை கட்டாயமாக்க வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். பிளிங்கிட், செப்டோ, இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது புகார்களையும் இதே அமைப்பு அளித்துள்ளது.